1. மின்காந்த அலைகள் உருவாக்கத்தில் அதிகமாக பங்களித்த இயற்பியலாளர்.
A. ரூடால்ஃப் ஹெர்ட்ஸ்
B. மைக்கல் ஃபாரடே
C. J.J.தாம்சன்
D. ஐசக் நியூட்டன்
2. R1 = 10 ± 0.3 ஓம் மற்றும் R2 = 20 ± 0.4 ஓம் ஆகிய இரு மின்தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பக்க இணைப்பில் அவற்றின் தொகுபயன் மின்தடை மதிப்பு
A. 5.7
± 0.1
B. 15.2
± 0.2
C. 6.7 ± 0.2
D. 9.5
± 0.1
3. கனசதுரம் ஒன்றின் அடர்த்தியானது அதன் நிறை மற்றும் பக்கங்களின் நீளங்களை அளவிடுவதன் மூலம் அளவிடப்படுகிறது. நிறை மற்றும் நீளம் அளவீட்டில் ஏற்படும் பெரும பிழைகள் முறையே 3% மற்றும் 2% எனில் அடர்த்தி அளவிடுதலின் ஏற்படும் பிழை
A. 1%
B. 9%
C. 7%
D. 5%
4. தனி ஊசலைப் பயன்படுத்தி புவி ஈர்ப்பு முடுக்கத்தை அளவிடும் பொது மாணவர் ஒருவர், ஊசலின் நீளத்தை அளவிடுதலில் 1% நேர்ப்பிழையும் அலைவு காலம் அளவிடுதலில் 3% எதிர்ப்பிழையும் செய்கிறார். 'g' அளவிடுதலில் ஏற்படும் சதவீதம் பிழை.
A. 2%
B. 4%
C. 10%
D. 7%
5 0.0006012 m -ல் உள்ள எண்ணுருக்களின் எண்ணிக்கை.
A. 3
B. 4
C. 5
D. 7
6. 2.64 x 104 kg -ல் உள்ள எண்ணுருக்களின் எண்ணிக்கை
A.
2
B. 4
C. 3
D. 5
7. ஒரே பரிமாணங்கள் உள்ள இயற்பியல் அளவுகளை கண்டறிக.
A. ஒளி ஆண்டு மற்றும் ஊசலில் அலைவுக் காலம்
B . கோண உந்தம் மற்றும் திருப்பு விசை
C. ஆற்றல் மற்றும் மீட்சியியல் குணகம்
D. திருப்புவிசை மற்றும் வேலை
8. L,
C மற்றும் R என்ற இயற்பியல் அளவுகள் முறையே மின் நிலைமம், மின்தேக்குத் திறன் மற்றும் மின்தடை ஆகியவற்றை குறிக்கின்றன. இவற்றில் எந்த கூட்டமைப்பு அதிர்வெண் பரிமாணத்தைத் தரும்?
A . 1/LC
B. R/L
C . 1/RL
D. C/L
9. C
என்பது மின்தேக்குத் திறன் மற்றும் V என்பது மின்னழுத்தம் எனில், CV2 -ன் பரிமாண வாய்பாடு
A. ML2T-2
B. ML-1T-2
C. ML-2T-3
D. ML2T-1
10. காலத்தைச் சார்ந்து x -அச்சில் துகள் ஒன்றின் இடப்பெயர்ச்சி x = at + bt2 - ct3. b ன் பரிமாணங்கள்
A. L0T-3
B. LT-3
C. LT-2
D. LT3
No comments:
Post a Comment