Search This Blog

Saturday, April 24, 2021

NEET - இயற்பியல் - பருப்பொருட்களின் பண்புகள்

1.       சீரான, படித்தர 200 வளிமண்டல அழுத்தத்தில் கோளவடிவ பந்தின் பருமன் 1% சுருங்குகிறது. பொருளின் அமுக்கக் குணகம் (1 வலி மண்டல அழுத்தம் = 105 Nm-2

A.         20 x 10-10 N-1m2

B .        5 x 10-10N-1m2

C.         10-10N-1m2

D         2 x 10-10N-1m2

2.        இழுவிசையின் காரணமாக உலோகக் கம்பி ஒன்று 1மீ லிருந்து 1.01m ஆக நீட்சி அடைகிறது. மேலும் 5N விசை கொடுக்கப்பட்ட போது அதன் நீளம் 1.03m ஆகிறது. தொடக்கத்தில் செலுத்தபட்ட இழுவிசை.

A.         5N

B.         2.5N

C.         7.5N

D.         3N

3.        A குறுக்கு வெட்டுப் பரப்பும் 2l நீளமும் கொண்ட கம்பி AB என்ற முனைகளுக்கு இடையே இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. கம்பியானது ACB என்ற வடிவத்தைப் பெறுமாறு (படம்) இழுக்கப்படும் போது கம்பிப் பொருளின் யங்குனகம் Y அடிப்படையில் கம்பியில் செயல்படும் இழுவிசை (d <<2l ) எனக் கருதுக.

            

A.         Y d2 / 2l2

B.         YA 2l2 / d2

C.         Y 2l2 / d2

D.         Y Ad2 / 2l2

4.        A, B, மற்றும் C என்பன முறையே 1m, 1.5m, மற்றும் 2m நீளமுடையதும் ஒரே குறுக்கு வெட்டுப் பரப்பும் கொண்டதுமான வெவ்வேறு கம்பிபோருள். அவற்றில் ஒரே அளவான இழுவிசை கொடுக்கப்பட்ட போது அவற்றின் நீளங்களில் ஏற்பட்ட நீட்சிகள் முறையே 2cm, 1.5cm, மற்றும் 3cm.

A.         A யின் மீட்சிப்பண்பு B ஐக் காட்டிலும் அதிகம்.

B.         C யின் மீட்சிப்பண்பு B ஐக் காட்டிலும் அதிகம்.

C.         B யின் மீட்சிப்பண்பு A ஐக் காட்டிலும் அதிகம்.

D.         A யின் மீட்சிப்பண்பு C ஐக் காட்டிலும் அதிகம்.

5.        சீரான தண்டின் ஒரு முனையில் பழு ஏற்றப்படுவதால் அது அடையும் நெடுக்கத்திரிபு 3 x 10-3m எனில் அதன் கன அளவில் ஏற்படும் சதவீ த உயர்வு (பாய்ஸான் விகிதம் = 0.4)

A.         0.6%

B.         0.3%

C.         0.06%

D.         0.03%

6.         5 cm2 குறுக்கு வெட்டுப் பரப்பு கொண்ட ஒரு மின் உயர்த்தி கம்பி வடத்தின் (cable ) மீட்சி எல்லை 6 x 108 Nm-2 மின்உயர்த்தி 40 ms-2 மேல் நோக்கிய முடுக்கத்துடன் செல்லும் போது கம்பி வடம் தாங்கக்கூடிய பெரும தகைவு, மீட்சி எல்லை மதிப்பில் மூன்றுக்கு ஒன்று மேற்படாதவாறு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மின் உயர்த்தியில் இருக்க வேண்டிய பெரும நிறை என்ன? (g = 10 ms-2)

A.            2000 kg

B.            600 kg

C.            300 kg

D.            6000 kg

7.         சீரற்ற குறுக்கு வெட்டுப் பரப்பு கொண்ட, கிடைத்தளத்தில் அமைந்த குழாய் ஒன்றின் வழியே நீர் சீராக செல்கிறது. குழாயின் குறுக்கு வெட்டுப் பரப்பு 0.04m2 கொண்ட புள்ளியில் நீரின் அழுத்தம் 2 x 104 Nm-2 மற்றும் நீரின் வேகம் 1 ms-1 கொண்ட புள்ளியில் முறையே நீரின் வேகம் மற்றும் அழுத்தம்.

A.            0.25 ms-1 , 2.5 x  104 Nm-2

B.            1.25 ms-1, 1.5 x 104 Nm-2

C.            4 ms-1, 1.25 x  104 N m-2

D.            2 ms-1, 1.5 x 104 N m-2

8.         1500 kgm-3 அடர்த்தி கொண்ட கரைசலில் 4mm விட்டம் கொண்ட காற்றுக் குமிழ் 30 cms-1 என்ற வேகத்தில் மேலெழும்புகிறது. கரைசலின் பாகியல் எண் (காற்றின் அடர்த்தியை புறக்கணிக்கவும்) (g = 10 ms-2) என்க.

A.            3.3 x 10-3 poise

B.            2.2 x 10-3 poise

C.            1.1 x 10-3 poise

D.            4.4 x 10-3 poise

9.         R ஆரமும் ρ/3 அடர்த்தியும் கொண்ட கோளப்பந்து ஒன்று ρ அடர்த்தி கொண்ட திரவத்தினுள் விடப்படும் பொழுது அது 2 cms-1 என்ற முற்றுத் திசைவேகத்தை அடைகிறது. அதே திரவத்தினுள் 2R ஆரமும் அடர்த்தியும் கொண்ட மற்றொரு கோளப்பந்து விடப்பட்டால் அது அடையும் முற்றுத் திசைவேகம்

A.            6 cms-1

B.            14 cms-1

C.            7 cms-1

D.            9 cms-1

10.       0.5mm விட்டமுடையை கண்ணாடித் துண்டு ஒன்று 1.5mm விட்டமுடைய நுண்புழைக் குழாயினுள் சமசீராக செலுத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பை நீரினுள் செங்குத்தாக செலுத்தினால், நீரானது நுண்புழைக் குழாயினுள் 'h' உயரம் ஏறுகிறது. நீரின் பரப்பு இழுவிசை 70 x 10-3 Nm-1 எனில் h ன் மதிப்பு 

A.            1.43 cm

B.            3.95 cm

C.            2.85 cm

D.            5.7 cm

No comments:

Post a Comment